Pages

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing

Thursday 30 August 2018

உங்கள் பகுதியில் குறைந்த விலை மருந்துக் கடை முதலாளி ஆகலாம் வாருங்கள்

உங்கள் பகுதியில் குறைந்த விலை மருந்துக் கடை முதலாளி ஆகலாம் வாருங்கள் என் அருமை மக்களே...
பிரதமர் மோடியின் குறைந்த விலை மருந்தகம் எனும் ஜன் ஔஷதி திட்டம் PMBJP...
உணவு, உடை, உறையுள் மட்டுமே நாம் வாழ அத்தியாவசியமாக இருந்தது. இன்று மருந்துகளும் அதில் சேர்ந்து விட்டது. ஏழை , நடுத்தர மக்களுக்கு மருந்து செலவு என்பது கழுத்தை நெறிக்கும் அளவிற்கு இன்று மருந்துகளின் விலை உள்ளது. உயிர் காக்கும் மருந்துகளை வாங்க முடியாமல் பல உயிர்கள் போயிருக்கிறது, சிலர் சூழ்நிலை திருடர்களாக மாறி உள்ளார்கள். இதைத்தடுக்கத்தான் நம் பிரதமர் மோடி ஏழை மக்களின் மருந்தகங்கள் திட்டத்தை (PMBJP) பெரிய அளவில் மக்களுக்கு பயனடையும் வகையில் கொண்டு சென்றார்.
“The poor must have access to affordable medicines; the poor must not lose their lives because of lack of medicines …That’s why Jan Aushadhi Kendras have been planned across the country”
— என்பதே பிரதமர் மோடியின் குறிக்கோள்.
ஜன் ஔஷதி மருந்தகங்கள் மத்திய அரசால் 2008ல் தொடங்கப்பட்டது. செப்டம்பர் 2015ல் இந்த திட்டம் பிரதான் மந்திரி ஜன் ஔஷதி யோஜனா (PMJAY) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நவம்பர் 2016ல் இத்திட்டத்திற்கு மீண்டும் ஒரு முறை பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் இப்பொழுதைய பெயர் பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி பரியோஜனா (PMBJP) ஆகும். இது வெறும் பெயர் மாற்றம் மட்டும் இல்லை. 2014 வரை நாட்டில் வெறும் 80 மருந்தகங்களே இருந்த நிலையில், மோடி பிரதமரானதும் கிட்டதட்ட 3000 கடைகள் தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடுயும் பெருமளவில் மோடி அரசால் உயர்த்தப்பட்டது.
ஜெனிரிக் மருந்து என்றால் என்ன?...
ஜெனிரிக் மருந்துகள் என்பது , பிராண்ட் மருத்துவகை போன்றதே. உதாரணமாக திருப்பூரில் உற்பத்தி ஆகும் பனியன்கள் ருபாய் 200 க்கு வாங்க முடியும், அதே பனியன் பிராண்டட் ஆகா ஸ்டிக்கர் ஒட்டி வரும் பொது ருபாய் 2000 ஆகும். இரண்டுக்கும் வித்தியாசம் ஓட்டபடும் ஸ்டிக்கர் மட்டுமே.
ஜன் ஆயுஷ் கடைகளில் இந்த குறைந்த விலை ஜெனிரிக் மருந்து வகைகள் கிடைக்கும்.
பிரதமரின் மருந்தக திட்டத்தின் நோக்கம் என்ன?.
ஏழை எளிய மக்களுக்கும் சிறந்த உள்நாட்டிலேயே தயாரிப்பான மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் உள் நாட்டில் மருந்து உற்பத்தி அதிகரிக்கும் , மக்களுக்கும் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும். இன்று வரை 2742 மருந்தகங்கள் இந்திய முழுவதும் ஆரம்பிக்க பட்டு உள்ளது. தமிழ் நாட்டில் 202 கடைகள் உள்ளது.
மருந்து வாங்குதல்...
கீழ் கண்ட இணைய முகவரியில் உங்களுக்கு அருகாமையில் உள்ள மருந்தகம் எது என்ற தெரிந்து கொள்ளலாம்.
உதாரணமாக இருமல் மருந்து சாதாரண மருந்து கடையில் Cough syrup- ரூ 33.00 விற்பனை விலை.
நம் பிரதமரின் ஜன் ஔஷத் மருந்துக்  கடையில் விற்பனை விலை -ரூ 13.30 தான்.
ஜன் ஔஷதி எனும் பிரதமரின் மலிவு விலை மருந்து கடைகள் ஆரம்பித்தல்:
ஒரு சராசரி மனிதனாக நீங்களே ஒரு ஜன் ஔஷதி மருந்து கடை ஆரம்பிக்க முடியும். உங்கள் சுய தொழிலாக இதை செய்து நீங்களும் சிறு வருமானம் ஈட்ட முடியும்.
அப்படி ஆரம்பிக்க என்னென்ன தேவை?...
1. உங்களுக்கு என்று சொந்தமாக ஒரு கடை அல்லது ஜன் ஔஷத் கடை துவங்க குறைந்தபட்சம் 120 சதுர அடி இடம் தேவை.
2. வாடகைக்கு எடுத்தால் பத்து ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் 5 ஐந்து வருடத்திற்கு ஒப்பந்த பத்திரம் தேவை .
3. குளிர்சாதனப் பேட்டி-180 litres
4. Airconditioner -1/2 டன்
5. கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டர்,மின்சாரம் இல்லாத நேரத்தில் பயன் படுத்த  யூ.பி.ஸ் வசதி, இன்டர்நெட் இணைப்பு
6. B.phrm/Dphrm கையெழுத்து போட மாதம் அவருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும்.
லைசென்ஸ் இதன் மூலம் கிடைக்கும். நாங்கள் அதனை உங்களுக்கு பெற்றுத் தருவோம்.
7. Photo-2
இதற்கு தேவையான நிதி உதவிகள் வங்கியில் முத்ரா திட்டத்தில் இருந்து பெறலாம்.
8. ஆரம்பிப்பவர் SC / ST பிரிவை சேர்ந்தவர் அல்லது மாற்று திறனாளியாக இருந்தால் அதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கபட வேண்டும்.
எவ்வளவு வருமானம் கிடைக்கும்?...
1. MRP-rate ல் 20 சதவிகிதம் நமக்கு கமிஷனாக கிடைக்கும்.
2. மேலும் 10000 ரூபாய் பெறுமானமுள்ள மருந்துகள் இலவசம்.
3. Rs 250000 வரை PDC- செக் Post Dated Cheque கொடுத்து மருந்துகள் வாங்கினால் ஒரு மாத கால அவகாசம் கிடைக்கும்.
குட ஓலை தொடர்புக்கு...
9884512087,9884612087,7550257810
(வாட்ஸ் அப்) பெயர்,மாவட்டம்,தொடர்பு எண் பதியவும்.
குறைகளை இ-மெயிலில் அனுப்பவும். kudavolai@gmail.com
உங்கள் பகிர்தல் நம் மக்களுக்கு மிக அவசியம்.

No comments:

Post a Comment