Pages

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing

Thursday 30 August 2018

ஏழைகளுக்கான சலுகையை பணக்காரர்கள் பெற அரசு தடுக்க சட்டம் ஏதும் இயற்ற கூடாது என்பது அபத்தம் அன்றி வேறில்லை

இலவசம் !!!!
                எல்லாம் வேண்டும்...ஆனால் அவைகள் இலவசமாக தரப்பட வேண்டும் !!!
            இப்படி சிலர் கிளம்பியிருக்கிறார்கள் !!!
          ஆங்கிலேயனை பார்...அமெரிக்கனை பார்...என்பார்கள்!!!
             ஆனால் இந்திய தேசத்தில் அதே சட்டம் கொண்டுவரப்பட்டால் ஐயோ...அப்பா...ஹிட்லரின் ஆட்சி இது என்பார்கள்!!!
            சுவிட்ஸர்லாந்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கும்....முதியோருக்கும் ஊக்கத்தொகை என்று அரசு அறிவிக்க முற்பட்ட போது 90 % மக்கள் அந்த நாட்டில் அந்த ஊக்கத்தொகையை நிராகரித்தார்கள் என்பதை தனது முகநூல் பக்கத்தில் போட்டு அதுவல்லவா நாடு என்கிறார்கள் !!!
            அரசு ஊழியருக்கும்....பணக்காரனுக்கும்...கார் வைத்திருப்போருக்கும் அரசின் ரேசன் கடை சலுகை கிடையாது என இந்திய அரசு அறிவித்தால் * ஐயகோ * இடி அமீனின் தம்பிமார்களின் இதயமற்ற சட்டத்தை பாரீர் என்று ஒப்பாரி வைப்பர் !!!
               நாட்டுப்பற்று என்பது டெண்டுல்கரும்...கோலியும் 100 அடிக்கும் போது எழுந்து நின்று கைதட்டுவது என்று நினைப்பவர்கள் அவர்கள்!!!
               75 %இலவச அரிசி மறுசுழர்ச்சியாக கிலோ ரூ 2 க்கு சந்தையில் விற்கப்படுகிறது  என்பது மறுக்க முடியாத உண்மை!!!
              ஆடு,மாடு,கோழி ஆகியவற்றிற்கு அவைகள் தீவனமாக விற்கப்படுகிறது !!!
                  பணக்காரன் ஏழையின் சலுகையை தட்டிப்பறிப்பதை அரசு தடுக்க முயற்சிக்கிறது !!!
           சட்டத்தில் சில குறைபாடுகளும் உள்ளதை மறுப்பதற்கு இல்லை.
        சட்டமே கூடாது என்பது சுயநலவாதிகளின் கூக்குரலாய் இருக்கிறது!!!
      ரேசன் பொருட்கள் இலவசமாய் வேண்டும்.வேலையில்லா பட்டதாரிக்கு ஊக்க தொகை வேண்டும்.தாலிக்கு தங்கம் வேண்டும்.இலவச டி.வி.,மிக்ஸி,கிரைண்டர்,மின் விசிறி, வேண்டும் .முதியோர் ஊக்க தொகை வேண்டும்!!!
             வேண்டும் என்று கேட்பது நியாயமே !!!
               அதை கேட்பவன் ஏழையாய் இருக்க வேண்டுமல்லவா???
        கார் வைத்திருக்கிறேன்.ஆனால் அது என் பெயரில் இல்லை.எனவே எனக்கும் சலுகை தா என கேட்பவர்களை என்ன செய்வது ???
           அரசு சட்டம் கொண்டு வந்திருக்கிறதே...எத்தனை பணக்காரன் எனக்கு ரேசன் சலுகை வேண்டாம் என்று ஓடிப்போய் ஒப்படைத்திருப்பான்???
         அரசு அறிவித்திருப்பதில் சில திருத்தங்கள் தேவை என்பதை நான் ஒப்புக்கொள்வேன் !!!
         ஆனால் இலவசத்தை @ ஏழைகளுக்கான சலுகையை பணக்காரர்கள் பெற அரசு தடுக்க சட்டம் ஏதும் இயற்ற கூடாது என்பது அபத்தம் அன்றி வேறில்லை!!!
          ஏழைகளுக்கான போர்வையை பணக்காரன் போர்த்துவதை அரசு தடுக்கும் எனில் அது மக்கள் நலன் விரும்பும் அரசே !!!!

No comments:

Post a Comment